• Sep 20 2024

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் ஹீரோக்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் அஜித்.இவர் எந்தப் படம் நடித்தாலும் அது பயங்கர ஹிட்டாகி விடும்.

தற்போது இவரின் 61 ஆவது படப்பிடிப்புக்கள் இடம்பெற்று வருகின்றது. இப்புதிய படம் தீபாவளிக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது மட்டுமன்றி தீபாவளி தினத்தன்று நடிகர் கார்த்தியின் "சர்தார்" படமும் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் தற்போது ஜெயம்ரவி நடிக்கும் "இறைவன்" படமும் தீபாவளிக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தீபாவளிக்கு "AK 61, சர்தார்" ஆகிய படங்களே மோதும் என்ற நிலையில் தற்போது 'இறைவன்" படமும் வெளியாகிறது என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் அதிகளவான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட நடிகர்கள் என்ற லிஸ்ட்டில் அஜித்தும் ஜெயம்ரவியும் இருப்பதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள்.

ஏற்கெனவே நயன்-ஜெயம்ரவி நடிப்பில் வெளியான "தனி ஒருவன்" படம் பயங்கர ஹிட்டைக் கொடுத்திருந்தால் மீண்டும் நயன்-ஜெயம்ரவி இணையும் "இறைவன்" படமும் வெற்றிப் படமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் அஜித் படத்தின் வசூலுக்கு நிகராக இப்படத்தின் வசூலும் இருக்கும் என சினிமா வட்டாரங்களால் எதிர்பார்க்கப்படுகிறது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement