விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக விறுவிறுப்பிறகு பஞசம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதுவரை ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் தற்பொழுது விரிசல் விழ ஆரம்பித்துள்ளது.
அதிலும் குறிப்பாக அனைவரும் வேலைக்கு போகின்றார்கள் என்பதால் ஜீவா மட்டும் சொந்தமாக சம்பாதிக்க முடியாததால் வீட்டில் ஒதுக்கப்படுவதாகக் கருதியதோடு மூர்த்தியிடம் முதன்முறையாக தனது மனதில் இருக்கும் விடயங்களை கூறுகின்றார்.
அத்தோடு இனிமேல் வீட்டுக்கு வரமாட்டேன் என்றும் கூறி விட்டார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் உடைந்து விட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இப்படியான நிலையில் இந்த சீரியலில் ஜீவா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் தன்னுடைய மகளின் பிறந்தநாளை சூப்பராக கொண்டாடியுள்ளார். இது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!