• Sep 20 2024

பிரியாவின் தொல்லை தாங்க முடியாமல் பைத்தியமான ஜீவா- வெளியாகிய வீடியோ -குழப்பத்தில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது ஈரமான ரோஜாவே 2.இதில் காவ்யா மற்றும் ஜீவா இருவரும் காதலிக்க, சந்தர்ப்ப சூழல்களால் அவர்கள் ஜோடி மாறி திருமணம் செய்யும் சூழல் ஏற்படுகிறது.காவ்யா ஜீவாவின் அண்ணன் பார்த்தியையும் ஜீவா காவ்யாவின் அக்கா பிரியாவையும் திருமணம் செய்துள்ளனர்.

பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று தங்களது காதலை தியாகம் செய்யும் ஜீவா மற்றும் காவ்யா, இந்த திருமணத்திற்கு சம்மதித்ததோடு தற்பொழுது தமக்கு அமைந்த வாழ்க்கை ஜோடிகளோடு வாழுவதற்கும் தயாராகி விட்டனர். இருப்பினும் பார்த்திபனின் அத்தை யான தேவி செய்யும் சதியால் இரு குடும்பமும் குழப்பத்தில் இருக்கின்றனர்.


இப்படியான நிலையில் கவியா கர்ப்பமாகியுள்ளார். இதனை பார்த்திபனுக்கு சொல்லாமல் முதலில் ஜீவாவுக்கு தான் காவியா சொல்லி இருக்கின்றார் என தேவி கதை கட்டி விட்டதால் ப்ரியா ஜீவா மீது சந்தேகத்தில் இருக்கின்றார். இதனால் ஜீவாவிடம் தனிக் குடித்தனம் போய்டுவோம் என்றெல்லாம் கூறுகின்றார்.

இதனால் ஜீவா என்ன முடிவு எடுக்கப் போகின்றார். குடும்பத்திலிருந்து பிரியப் போகின்றாரா? அல்லது பிரியா சந்தேகத்தை எப்படி நீக்கப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் இந்த சீரியலில் ஜீவா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் திரவியம் காதில் பூ வைத்த படி கமல்ஹாசனைப் போல ரீல்ஸ் வீடியோ செய்திருக்கின்றார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement