• Nov 19 2024

தனியாக நின்று கதறி அழும் ஜீவா...பார்த்தியின் திருமணத்தில் நடந்தது என்ன..வெளியான வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தற்போது விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே-2.இதில் திருமணத்தில் நடந்த சிறு தவறு காரணமாக காதலர்களாக இருந்த ஜீவாவும் காவியாவும் பிரிந்ததோடு ஜீவா ப்ரியாவையும் பார்த்தி காவியாவையும் திருமணம் செய்தனர்.

என்ன தான் குடும்பத்திற்காக இவர்கள் தமது காதலை தியாகம் செய்திருந்தாலும் காவியா பார்த்தியுடன் சேர்ந்து வாழக் கூடாது என அவரது அம்மா முதல் அத்தை எனப் பலரும் திட்டம் தீட்டி வந்தனர். ஒரு வழியாக காவியா காதலித்த விடயம் பார்த்திபனுக்கும் தெரிந்து விட்டது.

அத்தோடு அத்தை மகளான ரம்மியாவைத் திருமணம் செய்ய சம்மதித்து விட்டதோடு பார்த்திபன் ரம்மியாவின் திருமணம் மணமேடைக்கு வந்து விட்டது.


இந்நிலையில் தற்போது ஒரு ப்ரமோவளியாகி உள்ளது.அதாவது அதில் ஜீவா தனியாக நின்று எல்லா மாலையையும் பிய்த்து தன்னை அடித்துக்கொண்டு  கண்ணீர் வடித்து அழுது கொண்டு இருக்கின்றார்.

அதன் போது அவரின் மனைவி ஏன் அழுகுறீங்க எனக் கேட்க..அவர் பார்த்தியின் திருமணம் தான் எனக் கூறுகின்றார்.

ஆனால் பார்த்தி காவியாவுடன் வாழவேண்டும் என்று ஆசைப்படுகின்றான்.ஆனால் காவியாவோ வேண்டாம் என்று இருக்கிறாள் எனக் கூறி அழுகின்றார்.

பின் வாங்க உள்ளே போகலாம் எனக் கூற.இல்லை  நான் அம்மா வந்தவுடன் அவங்களை கூட்டிட்டு வாரேன் எனக் கூறி வெளியே நிற்கின்றார்.

இதோ அந்த ப்ரமோ...





Advertisement

Advertisement