• Sep 20 2024

பக்கத்துக்கு வீட்டு சிசிடிவியில் சிக்கிய ஜீவானந்தம்... அதிர்ச்சியில் ஆடிப்போன ஜனனி... நழுவிச் சென்ற கௌதம்... சூடு பிடிக்கும் 'எதிர்நீச்சல்' எபிசோட்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் அதிகம் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல் 'எதிர்நீச்சல்'. பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்தவகையில் ஜனனியும் சக்தியும் அப்பத்தாவின் ரூமில் இருக்கிறார்கள். அதில் "நம் அனைவரும் மண்டபத்துக்கு சென்றதும் உங்க அண்ணன் ஏதோ பிளான் பண்ணி செய்து இருக்கிறார். ஆனால் என்ன செய்தார் என்பது தான் தெரியவில்லை. அது வரையில் சிசிடிவி கேமரா வைக்க போகிறேன் என மிரட்டியவர், அப்பத்தா உடல் நலம் சரியில்லாமல் போனதையும் அது பற்றி கண்டுக்கவே இல்லை" என ஜனனி கூறுகின்றார். 


பின்னர் திடீரென சக்தியை அழைத்து கொண்டு எதிர் வீட்டுக்கு ஜனனி செல்கிறார். அதாவது சக்தியும் ஜனனியும் எதிர் வீட்டில் இருக்கும் சிசிடிவி கேமராவை பார்த்து ஆதிரை திருமணத்துக்காக அனைவரும் மண்டபத்தில் இருந்த போது யார் வீட்டுக்கு வந்து அப்பத்தா கைரேகையை எடுத்தது என்பதை தெரிந்து கொள்ளலாம் என எதிர் வீட்டில் இருப்பவரிடம் சென்று விசாரித்து சிசிடிவி புட்டேஜ் பார்க்கிறார்கள். 


அந்த சிசிடிவியில் ஜீவானந்தம் வீட்டுக்குள் நுழைவது தெரிந்தாலும் அது யார் என்பது ஜனிக்கும் சக்திக்கும் தெரியாததால் அவர்கள் அது குணசேகரன் அனுப்பிய ஆட்கள் என தங்களுக்குள் நினைத்து கொள்கிறார்கள். மறுபுறம் ரேணுகா, நந்தினி மற்றும் ஐஸ்வர்யா அரசு பள்ளிக்கு சென்று ஐஸ்வர்யாவின் விருப்பம் குறித்து ஆசிரியையிடம் தெரிவிக்கிறார்கள். ஆசிரியை அரசு பள்ளி பற்றியும் அங்கு மாணவர்களுக்கு கொடுக்கும் செயல்முறை கல்வி குறித்தும் விளக்கம் கொடுக்கின்றார். 


இதனால் ரேணுகாவும் நந்தினியும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். மூவரும் திரும்பி வரும் போது இந்த விஷயத்தில் ஸ்ட்ராங்காக இருப்பது குறித்து பேசி கொண்டு வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சக்தியும் ஜனனியும் கௌதமை அழைத்து பேசுகிறார்கள். அப்பத்தாவுக்கு, குணசேகரன் சொத்தில் 40% ஷேர் எழுதி வைத்து இருப்பது சமீபத்தில் தான் எங்களுக்கு தெரியவந்தது. அப்பத்தாவை மிரட்டி குணசேகரன் அந்தப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார். 


ஆனாலும் அதன் பின்னர் தான் அப்பத்தா உடல்நலம் சரியில்லாமல் கோமோவாவுக்கு சென்றுவிட்டார். இருப்பினும் அப்பத்தா மருத்துவமனையில் இருக்கும் போது அடிக்கடி ஜனனியிடம் ஒருவரின் பெயரை சொல்லி கொண்டே இருந்தாராம். அவர் பெயர் ஜீவானந்தம். அப்பத்தா போனில் இருந்த நம்பரை வைத்து அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன் ஆனால் ஒரு பெண் தான் போனை எடுப்பார். பட்டம்மாள் பேத்தி என சொல்லியதும் போனை உடனே கட் செய்து விடுவார். 

அதுமட்டுமல்லாது என்னுடைய நம்பரை பிளாக் செய்து விட்டார். என்னால் ஆன முயற்சிகள் அனைத்தையும் செய்துவிட்டேன் இருப்பினும் அவரை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. வீட்டுக்கு சிலர் வந்தது சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளது. வேலை செய்பவர்களை ஏதோ ஒரு காரணம் காட்டி வெளியில் அனுப்பி வைத்துள்ளார்கள் என்றால் அது நிச்சயம் என்னோட அண்ணன் குணசேகரன் வேலையாக தான் இருக்கணும் என சொல்லி புட்டேஜில் இருந்த அந்த நபரின் போட்டோவை கௌதமிடம் காட்டுகிறார்கள்.

அந்த சமயத்தில் ஜீவானந்தம் போட்டோவை பார்த்து ஷாக்கான கெளதம் இவரை இதுவரையில் பார்த்ததில்லை. ஆனால் என்னால் முடிந்த அளவு நான் முயற்சி செய்கிறேன் எனக் கூறி அந்த இடத்தை விட்டு நழுவி செல்கின்றார். இவ்வாறாக நேற்றைய எபிசோட் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement