• Sep 20 2024

பட்டம்மாள் சொத்தைக் கைப்பற்றிய ஜீவானந்தம்... குணசேகரன் முகத்தில் கரியைப் பூசிய ஐஷு... இனி நடக்கப் போவது என்ன..? சூடு பிடிக்கும் 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக 'எதிர்நீச்சல்' மாறியுள்ளது. இந்த சீரியலில் ஆதிரைக்கு சமீபத்தில் கரிகாலனுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளிவந்துளளது.


அதில் பர்கானா ஜீவானந்தத்திடம் "நாம நினச்ச மாதிரியே பட்டம்மாளினுடைய 40% ஷேர் நம்மளுக்கு வந்திடிச்சு" எனக் கூறி சந்தோசப்படுகின்றார். மறுபுறம் குணசேகரன் ஐஷு கூட்டி வந்த நபரை வெளியே போகுமாறு மிரட்டுகின்றார்.


பதிலிற்கு ஐஷு "இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டத்தைப் பற்றி நல்லா தெரிஞ்சும் இவனை இங்க கூட்டிற்று வந்தது என் தப்பு தான், உங்கள எல்லாம் அப்பா என்று சொல்லவே எனக்கு அசிங்கமாய் இருக்கு" என்கிறார். அதற்கு குணசேகரன் "என்னது அப்பான்னு சொல்ல அசிங்கமாய் இருக்கா" எனக் கேட்கின்றார். 


மேலும் இதனைப் பார்த்ததும் சக்தி மற்றும் ஜனனி டென்சன் ஆகின்றனர். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. 

Advertisement

Advertisement