• Sep 21 2024

குட் நியூஸ் சொன்ன துணிவு பட வில்லன் ஜான் கொக்கன்...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

துணிவு படத்தின் வில்லன் நடிகர் ஜான் கொக்கன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜான் கொக்கன். மேலும் இவர் அஜித்துடன் 'வீரம்' படத்தில் தமன்னாவை கொல்ல வரும் கூலிப்படை தலைவனாக நடித்திருப்பார்.  கே.ஜி.எஃப்- 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர். கே.ஜி.எஃப் முதல் பாகத்திலும் நடித்திருந்தார்.  ’கப்ஜா’ என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்த 'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று  திரையரங்குகளில் வெளியானது.

'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


அத்தோடு துணிவு படத்தில் யுவர் பேங்க் வங்கி உரிமையாளர் கதாபாத்திரமான க்ரிஷ் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் ஜான் கொக்கன் நடித்துள்ளார்.


இவ்வாறுஇருக்கையில்  ஜான் கொக்கன் தனது முகநூல் பக்கத்தில் மனைவி பூஜாவுடன் தாய்லாந்து நாட்டில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து மனைவி பூஜா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.


பூஜா தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போது ரசிகர்கள் ஜான் கொக்கன் & பூஜாவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement