• Sep 20 2024

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த விஜய் தனது ஸ்டோரியில் முதன்முறையாக வெளியிட்ட பதிவு- வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் சர்வதேச அளவில் அனைவருக்கும் பிடித்தமான நடிகராக இருந்து வருகிறார். ஏராளமான ரசிகர்களின் பேவரிட்டாக உள்ளார். அடுத்தடுத்த சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். ஏற்கனவே வெற்றிகரமாக வலம்வரும் இயக்குநர்களுக்கு மட்டுமில்லாமல் புதியவர்களுக்கும் தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்து வருகிறார். 

அதிகமான பேசாத நபர் என்பதால் சமூக வலைதளங்களிலும் விஜய்யை அதிகமாக பார்க்க முடியாது. கடந்த 2013ம் ஆண்டில் ட்விட்டரில் இணைந்தாலும் இந்த 10 ஆண்டுகளில் தன்னுடைய படங்களின் ட்ரெயிலர், சில முக்கிய நபர்களுக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்ட அளவிலேயே இவரது ட்விட்டர் அக்கவுண்ட் காணப்படுகிறது. இவரை 44 லட்சம் பேர் ட்விட்டரில் பாலோ செய்து வருகின்றனர். ஆனால் அவர் இதுவரை யாரையும் பாலோ செய்யவில்லை.


இந்நிலையில் இன்றைய தினம் விஜய் திடீரென இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். அவர் இணைந்தது தெரிந்த ரசிகர்கள் தொடர்ந்து தங்களையும் அவரது பாலோயராக இணைத்து வருகின்றனர்.5 மணி நேரத்தில் 24 லட்சம் பாலோவர்ஸ் இவரைப் பின்பற்றி வருகின்றனர். அத்தோடு விஜய்யின் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர்.


இப்படியான நிலையில் விஜய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் லியோ படத்தின் ஷுட்டிங்கின் போது காஷ்மீரில் எடுத்த புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகள் குவிந்து வருவதையும் காணலாம்.



Advertisement

Advertisement