’லால் சலாம்’ படத்தின் தோல்வி தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ’லால் சலாம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்த படத்தில் மத நல்லிணக்கம் குறித்த கதையம்சம் கூறப்பட்டது என்பதும் குறிப்பாக இந்து மற்றும் இஸ்லாமிய ஒற்றுமைக்காக பாடுபடும் கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொய்தீன் பாய் என்ற ரஜினிகாந்த் கேரக்டர் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வசூலில் பாதி கூட இல்லை என்றும் ரஜினிகாந்த் நடித்திருந்தும் இந்த படம் படுதோல்வி அடைந்ததாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் இது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’லால் சலாம் படத்தின் தோல்வி தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என்று தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரை மதம் என்பதை பெரிய பிரச்சினையாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும், இந்துத்துவா என்ற மந்திரம் வடநாட்டில் பலித்தாலும் தமிழ்நாட்டில் மட்டும் எடுபடாத வகையில் தான் இதுநாள் வரை இருந்தது என்று தெரிவித்தார்.
ஆனால் கடந்த சில வருடங்களாக ஒரு இந்துத்துவா கட்சி மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டில் வளர்ந்து வருவதால் மத நல்லிணக்கம் என்பது குறைந்து வருவதாகவும் ’லால் சலாம்’ போன்ற மத நல்லிணக்கத்தை கூறும் படங்கள் தோல்வி அடைவது தமிழ்நாடு இந்துத்துவா மாநிலமாக மாறி வருகிறது என்றும் இது தமிழகத்துக்கு ஆபத்து என்றும் அவர் தெரிவித்தார்.
Listen News!