• Nov 14 2024

ஏழைகளின் MGR ராக வாழ்ந்த கேப்டன் விஜயகாந்தின் வாழ்க்கை பயணம்! நெகிழவைக்கும் நினைவுகள்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜயகாந்த் திடீரென உயிரிழந்தது ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி உள்ளது. தற்போது அவரது மறைவிற்கு தமிழ் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்களை தாண்டி பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அவர் இதுவரையில் கடந்து வந்த பாதையையும், மக்கள் மத்தியில் அவர் நீங்கா இடம்பிடிக்க என்ன காரணம் என்பதையும் விரிவாக பார்க்கலாம்.

தமிழ் நாட்டின் கேப்டன் விஜயகாந்த் ஏழைகளின் MGR என்று மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்,. இவ்வாறு ஏழை மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்த தெய்வத்தின் மறைவை யாராலும் தாங்கி கொள்ள முடியவில்லை . இந்த மனுஷன் மாறி யாராலையும் உதவி  செய்ய முடியாது என்று சொல்லுகின்ற  அளவுக்கு மக்களின் மனதில் குடி கொண்டவர் . 


பட ஷூட்டிங் நேரத்தில கூட தான் சாப்பிடற சாப்பாடு தான் எல்லாரும் சாப்பிடனும் என்று சொல்லி அடிமட்டத்தில இருக்கிற தொழிலாளர்களும்  சாப்பிடனும் என்று சொல்லி தொழிலார்களுடைய வயித்த நிரப்பினது மட்டும் இல்ல அவங்கட மனசையும் நிரப்பினவரு தான் கேப்டன் என்று பல பெயர் சொல்றத கேட்டு இருப்போம் .

அத்துடன், சினிமா துறைமீது அவர் கொண்ட ஆர்வத்தினால் வண்டிலேயே மதுரயில இருந்து சென்னைக்கு நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வந்துள்ளார். அப்பிடியே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்து அரசியல் களத்தில் தனக்கென்று மிகப்பெரிய இடத்தை பிடித்தார்.

விஜயகாந்த் என்று சொல்வதை விட கேப்டன் விஜயகாந்த் என்று சொல்வதை தான் எல்லாருமே  ரொம்ப விரும்புவாங்க. அந்த அளவுக்கு அந்த துணை பெயருக்கு தகுதியானவர் இவர் மட்டும் தாங்க  என்று தொண்டர்கள் மட்டும் இல்லாம பொது மக்களும் சொல்லுகின்றனர்.


இப்பிடிப்பட்ட நம்ம கேப்டன் சாதாரணமாக தனது பயணத்தை தொடர்ந்து ஊரில இருந்து வந்து எப்பிடியாவது சினிமால சாதிக்கனும் என்று,  ஒரு லோன்ச் ஒன்றிலே தங்கி நின்று சினிமா வாய்ப்பு தேடினார் .  இவருக்கும் எல்லார் போலவும் வாய்ப்பு உடனே கிடைக்கல. இருந்தாலும் விடாமல்  முயற்சி செய்த இவருக்கு, முதல் படத்தில் வில்லன் கதாபத்திரம் கிடைக்க அதில் நடிச்சு பட்டையை கிளப்பியிருந்தார். அதை தொடர்ந்து தனது ஹீரோ பயணத்தை 1979 ம் ஆண்டு வந்த அகல் விளக்கு படத்தின் மூலம் ஆரம்பித்தார்.

1989 ம் வருடத்தில  சட்டம் ஓர் இருட்டறை என்ற படம் விஜகாந்தின் வாழ்க்கையில் திருப்பு முனையாக இருந்தது .அதனை தொடர்ந்து எக்க சக்கமான வெற்றி படங்களை குவித்தார். 


அதனை தொடர்ந்து பொலிஸ் கதாபாத்திரங்களில் மட்டும் 20 படங்களுக்கு மேல நடிச்சி இருந்தாராம் .இதன் மூலமாக மக்களுடைய செல்வாக்கை பெற்று இருந்தார். 2005 அரசியலில் கால் வைத்து தே .மு .தி .கா கட்சியை தொடர்ந்து இவர் அரசியலில தொடர்ந்து நிற்க மாட்டார் என்று சொன்ன இடத்தில நின்று காட்டி எதிர் கட்சி தலைவராகவும் ஆனார் .

எனினும், அரசியலிலே கால் பதித்த இவருக்கு, அடுத்தடுத்த படங்கள்  தோல்வியை சந்திக்க வைத்தது. ஆனாலும் அரசியலில் பெரும் வெற்றி கண்டார்.

இவ்வாறான நிலையில், தனது உடல் நலக்குறைவால் அரசியலில் இருந்து சற்று விலகி இருந்த அவர், இன்றைய தினம் தனது  71 வயதில் உயிரிழந்தார்.

தற்போது அவரின் மறைவுக்கு கட்சித் தொண்டர்கள் மட்டுமில்லாமல் பிரபல நட்சத்திரங்கள், அரசியல் முக்கியஸ்தலர்கள், ரசிகர்கள் என ஒட்டுமொத்த மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement