• Nov 19 2024

கஷ்டப்பட்டு உழைக்கும் ஒரு அம்மாவின் மகள்தான் ஜோவிகா! பதிலடிகொடுத்த வனிதா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.


இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் நடக்கும் ராங்கிங் டாஸ்க்கில் ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸும் ஒவ்வொரு இடத்தில் நிற்கின்றனர். அப்போது பிரதீப் முதலாவது இடத்தில் நிற்பதால் எல்லோரும் திட்டுகின்றனர். இரண்டாவது இடத்தில் ஜோவிகா இருக்கிறார்.


இதன்போது பிரதீப், ஜோவிக்கவை பார்த்து  'நீ மிடில் கிளாஸ் என்று சொல்லாத' என்று சொல்ல, ஜோவிகா 'நான் அங்க இருந்துதான் வந்தேன்' என்று ஜோவிகா கூறுகிறார். இவர்களுக்கிடையில் இப்படியே வாக்குவாதம் நடைபெறுவது போல ப்ரோமோ முடிவடைகிறது.  

இதையடுத்து தனது மகளை சீண்டிப் பார்த்த பிரதீப்க்கு சிறந்த பதிலடியை கொடுத்துள்ளார் வனிதா. அதன்படி அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

'கஷ்டப்பட்டு உழைக்கும் ஒரு அம்மாவின் மகள்தான் ஜோவிகா என்றும் உன்னிடம் காசு இல்லைன்னு புலம்புவதற்காக ஏன் பிக்பாஸ் வீட்டுக்கு வந்த என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இது கேம் என்றும் பிக் பாஸ் வீட்டில் வரும் பணத்தை வைத்து இவ்வாறு படம் தயாரிக்க வேண்டும் நடிக்க வேண்டும் என்பதெல்லாம் சுத்த உருட்டு, திறமை இருந்தால் நல்லா நடிச்சா மத்தவங்க பணம் போட்டு உன் படத்தை தயாரிக்க போறாங்க' என மரணமாக கலாய்த்துள்ளார்.

Advertisement

Advertisement