• Sep 20 2024

ஹவுஸ்மேட்ஸுடன் மோதலில் ஈடுபடும் ஜோவிதா- இரண்டாவது மகளுடன் ஜாலி ட்ரிப் சென்ற வனிதா- வெளியாகிய போட்டோஸ்

stella / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 மற்ற சீசன்களை போல இல்லாமல் ஆரம்பித்த நாளிலிருந்து பல்வேறு சண்டைகள் மற்றும் சச்சர்வுகளுக்கு மத்தியில் ஒளிபரப்பாகி வருகின்றது. இதுவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியதால் இந்த வாரம் வீட்டை விட்டு யார் வெளியேறப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பே ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.


இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டினர் சமைக்க முடியாது என்று கூறி ஸ்ட்ரைக் செய்தனர். இதனால் பிக் பாஸ் வீட்டினருக்கும், ஸ்மால் பாஸ் வீட்டினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பின்னர் கேப்டனாக இருக்கும் விக்ரம் நானே வந்து உங்க வேலையை செய்கிறேன் என கூறி ஸ்ட்ரைகை முடிவுக்கு கொண்டு வந்ததோ அனைவருக்கும் சமைத்தும் பரிமாறினார்.


மேலும் இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் தான் ஜொவிதா விஜயகுமார். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்து ஆக்டீவாக இருந்த வருகின்றார். நேற்றைய தினம் நடந்த சண்டையில் கூட பிரதீப்பை வாடா போடான்னு பேசியிருந்தார். இந்த சண்டை தற்பொழுது ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.


இதனால் இவர் வனிதாவையே மிஞ்சிவிடுவார் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.வனிதா தனது மூத்த மகளை பிக் பாஸ் அனுப்பிவிட்டு தற்போது தனது இளைய மகள் உடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா கிளம்பி இருக்கிறார்.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருக்கும் புகைப்படங்களை தற்போது வனிதா வெளியிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.





Advertisement

Advertisement