• Sep 21 2024

முதல் வாரமே நாமினேஷனில் சிக்கிக் கொண்ட ஜோவிதா- வனிதா போட்ட பதிலடி- நாமினேட் செய்யப்பட்டதற்கு இது தான் காரணமா?

stella / 11 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் ஏழாவது சீசன் நேற்று முதல் தொடங்கியிருக்கிறது. மொத்தம் 18 போட்டியாளர்கள் வீட்டுக்குள் சென்றிருக்கின்றனர். யுகேந்திரன், கூல் சுரேஷ் உள்ளிட்ட சிலரை தவிர்த்து பெரும்பாலும் பிரபலம் ஆகாதவர்களே இந்த முறை போட்டியில் இருக்கின்றனர். இதனால் இந்த சீசன் எப்படி நகரும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.

ஆனால்  நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.அதன்படி இரண்டு வீடுகள் இருக்கும் நிலையில் கேப்டனை கவர தவறிய ஆறு பேர் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் முதல் நாளே செம ட்விஸ்ட்டா இருக்கே என்று கூறி வருகின்றனர்.


அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களையும், ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களையும் நாமினேஷன் செய்ய வேண்டும் என்று ட்விஸ்ட் வைக்கப்பட்டது.

அதன்படி 7 பேர் நாமினேஷன் ஆகியுள்ளனர்.அதில் வனிதாவின் மகள் ஜோவிதாவும் நாமினேட் ஆகியுள்ளார்.இந்நிலையில் மகள் நாமினேட் ஆனது பற்றி வனிதா ஒரு பதிவை போட்டிருக்கிறார்."உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது பேபி" என வனிதா குறிப்பிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஜோவிகாவின் தாய் வனிதா  ஏற்கனவே பிக்பாஸில் கலந்துகொண்ட அனுபவம் பெற்றவர். எனவே தான் செய்த தவறுகளை செய்யக்கூடாது என மகளுக்கு சொல்லி அனுப்பியிருப்பார். அதன் காரணமாக ஜோவிகா டஃப் கண்டெஸ்டெண்ட்டாக வரக்கூடும் என ஹவுஸ் மேட்ஸ் அஞ்சுவதாகவும் அதனால்தான் அவரை ஆரம்பத்திலேயே காலி செய்ய முடிவெடுத்துவிட்டார்களோ எனரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடதத்தக்கது.



 

Advertisement

Advertisement