நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக பீஸ்ட் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்து. ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனை அடுத்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்த வருகின்றார்.இப்படத்தை தில் ராஜு தயாரிக்கின்றார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.இப்படம் வரகின்ற பொங்கலுக்க வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி விட்டது.
இதனை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படம் கேங்ஸ்டர் வகைமையில் உருவாக உள்ளது என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.
இந்தப் படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் ஆரம்பமாகி விட்டன.மேலும் சமீபத்தில் 'ஜில் ஜங் ஜக்' இயக்குனர் தீரஜ், இணை எழுத்தாளராக 'தளபதி 67' படத்தில் இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் நடிகை பூனம் பாஜ்வாவும் இப்படத்தில் இணைந்துள்ளதாக டுவிட்டரில் டுவீட் செய்துள்ளார். மேலும் இந்த ட்வீட்டை தற்போது நடிகை பூனம் பாஜ்வா நீக்கிவிட்டாலும் இதன் ஸ்கிரீன் ஷாட் தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.
நடிகை பூனம் பாஜ்வா, தமிழில் கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, சேவல், துரோகி, முத்தின கத்திரிக்காய் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!