தமிழ் சின்னத்திரை நடிகையாகவும் டான்சராகவும் வலம் வருபவர் தான் ரேமா.இவர் தற்பொழுது பல சீரியல்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.சமீபத்திய பேட்டி அளித்த இவர் டான்சர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கூறியுள்ளார். அதாவது கோயில் விழாக்களுக்கு, திருமண நிகழ்ச்சிகளுக்கெல்லாம் டான்சர்கள், பாடகர்களை கூப்பிடுவார்கள்.
ஆனால் பாடகர்களுக்கு போக்குவரத்து, தங்கும் இடம் என எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துகொடுப்பார்கள், டான்சர்களுக்கு உணவு கூட கொடுக்க மாட்டார்கள். உடை மாற்ற ஒரு ரூம் கூட இருக்காது. பலர் கூடி இருக்கும் பொது இடத்தில், அப்படியே ஒரு ஸ்கிரீன் கட்டி, துணி மாற்றிக்கொள்ள சொல்வார்கள். பொதுவாகவே, பாடகர்களுக்கு கொடுக்கும் மரியாதை, டான்சர்களுக்கு இல்லை, அதிலும் குறிப்பாக பெண்களுக்கு இல்லை.
பாடலை எழுதியவர்கள், பாடியவர்களை எல்லாம் மிகவும் மரியாதையாக நடத்துகின்றனர். ஆனால், அந்த பாடல்களுக்கு டான்ஸ் ஆடினால் அவர்களை இழிவாக பேசுகின்றனர். ஊ சொல்றியா மாமா, காவாலயா போன்ற பாடல்களை எழுதியவர்களை, அந்த பாடல்களை பாடியவர்களை எல்லாம் விட்டுவிட்டு, அதற்கு டான்ஸ் ஆடுபவர்களை பற்றி தரகுறைவாக விமர்சிக்கின்றனர்.
சமந்தாவுக்கே இந்த நிலைமை என்றால், எங்களை போன்றவர்களின் நிலமை அதை விட மிகவும் மோசமாக தானே இருக்கும் என்று கூறியுள்ளார். பாடலை பாடுவதை போலவே, ஆடுவதும் ஒரு கலை தான். எல்லாவற்றையும் ஒரே மாதிரி மதிக்க வேண்டும், பார்க்க வேண்டும் என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Listen News!