அதிவேகமாக ரோட்டில் வண்டி ஓட்டி, யூடியூப் பக்கத்தில் அதன் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர் டிடிஎப் வாசன். இவர் ட்வின் த்ரோட்லர்ஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரது வீடியோக்கள் பைக் ரைடிங்கை விரும்பும் 2கே கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலம்.
மேலும் அடிக்கடி டிடிஎஃப் வாசன் நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிகவும் வேகமாக பைக்குகளை இயக்குகிறார் என பல்வேறு புகார்கள் எழுந்து, அபராதம் விதித்ததை தாண்டி கைது நடவடிக்கைகளுக்கும் ஆளாகியுள்ளார்.
அப்படித்தான் சமீபத்தில் பைக்கில் கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளார். அதாவது 230கிலோ மீற்றர் வேகத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது இவர் வீலிங் செய்தமையினால் தான் அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரைக் கைது செய்தனர்.
இந்நிலையில் வாசனுக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. அத்தோடு வாசனின் பைக்கை எரித்து விட வேண்டும் எனவும், விளம்பரத்திற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அவரின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் எனவும் நீதிபதி.சி.வி. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Listen News!