• Sep 22 2024

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கே.ஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த ஆதவன் திரைப்படத்தில் உதவிப்பணியாளராக சிறப்புத்தோற்றத்தில் அறிமுகமானவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின் . ஒரு கல் ஒரு கண்ணாடி, இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.மேலும் இது கதிர்வேலன் காதல்,நண்பேன்டா, மனிதன் போன்ற படங்களில் நடித்து பிரபல்யமானார். இவர் நடிகராக மட்டுமன்றி தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும், விளங்குகின்றார்.

தொடர்ந்து 2020இல் வெளிவந்த சைக்கோ என்ற படத்தில் கண் தெரியாத தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் நல்ல விமர்சனங்களையும், வணிக ரீதியாகவும் நல்ல வசூலையும் பெற்றுத்தந்தது.அந்தவகையில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சுக்குள் நீதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியகியாகவுள்ளது.கடந்த 2019 இல் ஆர்டிகிள் 15' திரைப்படம் ஹிந்தியில் வெளியாகி பல விவாதங்களை ஏற்படுத்தியது.வெளியாகும் போதே இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தினை அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தமிழ் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆறி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், திரைப்படம் இன்று திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் அசோக்நகர் காசி திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் உதயநிதி ஸ்டாலின் போட்டோவை முதுகில் ஓடிக்கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மற்றும் வசூலிலும் அள்ளி குவித்தது. இந்நிலையில் இன்று இந்த திரைப்படத்தின் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement