• Sep 20 2024

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி-மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களில் ஒருவரான இயக்குநரான அருண் காமராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த மே மாதம் 20ம் திகதி வெளியாகிய திரைப்படம் தான் நெஞ்சுக்கு நீதி. இப்படத்தினை போனிகபூர் தயாரித்திருந்தார்.

பாலிவூட் சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஆர்ட்டிகிள் 15 என்ற படத்தின் ரீமேக் தான் இது. இப்படத்தில் உதயநிதியுடன் ஆரி, தன்யா ராஜேந்திரன், மயில்சாமி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்திருந்தனர்.

கலைஞரின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் தலைப்பான ‘நெஞ்சுக்கு நீதி’ யை படத்துக்கு வைத்துள்ளது கூடுதல் கவனத்தைப் பெற்றது. ரிலீஸூக்குப் பின்னர் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் பாராட்டுகளையும் இப்படம் அள்ளிக் குவித்தது.

தற்போது இப்படம் தொலைக்காட்சியில் முதன்முறையாக ஒளிபரப்பாக இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம். அதற்கான ப்ரமோ தற்போது டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement