• Sep 21 2024

திடீரென டிரெண்டான #JusticeforVigneshShivan ஹாஷ்டேக்- அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தொடர்ந்து 4 படங்களில் நடித்த நடிகர் அஜித் அடுத்ததாக இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என 3 படங்களில் நடித்தார்.

அடுத்ததாக இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீர் ட்விஸ்ட்டாக விக்னேஷ் சிவன் மாற்றப்பட உள்ளார் என்கிற தகவல் தீயாக பரவி வருகிறது.


ஏகே62 ஹாஷ்டேக் காலையில் இருந்து டிரெண்டாகி வந்த நிலையில், தற்போது #JusticeforVigneshShivan ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.மேலும், விக்னேஷ் சிவனை அஜித் தன் படத்திலிருந்து நீக்கக் கூடாது என்றும் அவர்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவருதற்கு முன்பாக இப்படி டிரெண்டிங் வரை அஜித் 62 படம் பற்றி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏகே 62 படத்தில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவனை அதிரடியாக நீக்கக் கூடாது என்றும் அவருக்கு நீதி வேண்டும் என #JusticeforVigneshShivan ஹாஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து அதில் ஏகப்பட்ட வீடியோ மீம்களையும், போட்டோ மீம்களையும் பதிவிட்டு வருகின்றனர்.


மங்காத்தா டைப் அஜித் படம் வேணும்னு ஆசைப்பட்டீங்களே, நிஜமாகவே அஜித் மங்காத்தாவை காட்டிட்டாருன்னு விக்னேஷ் சிவனை காரில் இருந்து அஜித் தள்ளி விடுவது போல மங்காத்தா படக் காட்சியை எடிட் செய்து வீடியோக்களையும், போட்டோக்களையும் வெளியிட்டு விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர்.



Advertisement

Advertisement