• Sep 21 2024

தனது பிள்ளைகள் மற்றும் அக்கா நக்மாவுடன் திருமண விழாவில் கலந்து கொண்ட ஜோதிகா- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

1998 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி திரைப்படமான டோலி சாஜா கே ரக்னா மூலம் ஹிந்தி சினிமாவில் பிரபல்யமானவர் தான் ஜோதிகா. இதனைத் தொடர்ந்து தமிழில் வாலி படத்தின் மூலம் அறிமுகமாகினார். ஜோதிகா சமீபத்தில் தனது ஹிந்தி படமான ஸ்ரீ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார்.மலையாளத்தில் காதல்: தி கோர் என்ற படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக கதாநாயகியாக ஜோதிகா நடிக்கிறார். இந்த படத்தை தி கிரேட் இந்தியன் கிச்சன் புகழ் ஜியோ பேபி இயக்குகிறார்.


இவருடைய சகோதரியான நடிகை நக்மா, காதலன், பாட்ஷா, லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, சிட்டிசன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமில்லாமல், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட  மொழிகளிலும் பல படங்களில் நக்மா நடித்துள்ளார்.கடந்த 2003 ஆண்டு முதல், முழு நேர அரசியலில் ஈடுபட்டு வரும் நக்மா காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.


இந்நிலையில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நக்மா தமது சகோதரி ஜோதிகாவுடன் குடும்ப திருமண நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


ஜோதிகாவின் குழந்தைகள், ஜோதிகா, மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களையும் நக்மா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.



Advertisement

Advertisement