விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இவர் ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார்.
விஜயின் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அழைக்கிறார்கள். விஜய் தனது 10வது வயதில் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார்.
பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு படத்தில் முதன்முறையாக முதன்மை நடிகராக நடித்தார். விஜய் - ஜோதிகா முதல் முறையாக குஷி படத்தில் தான் இணைந்து நடித்தார்கள். இப்படத்திற்கு பின் மீண்டும் திருமலை படத்தில் விஜய் - ஜோதிகா இணைந்து நடித்தார்கள்.
இந்த இரு திரைப்படங்கள் மட்டுமின்றி இன்னும் இரு திரைப்படங்களிலும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இருந்தது. ஆம், விஜய் - சூர்யா இனைந்து நடித்து வெளிவந்த Friends திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன் முதலில் ஜோதிகா தான் நடிப்பதாக இருந்தார்.
ஆனால், அதன்பின் நடிகை ஜோதிகா படத்திலிருந்து வெளியேறிவிட்டார். இதன்பின் தான் தேவயானி இப்படத்தில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார். பல ஆண்டுகள் கழித்து அட்லீ இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் படத்தில் நித்யா மேனன் நடித்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிப்பதாக இருந்தது ஜோதிகா தான். ஆனால், சில காரணங்களால் இப்படத்தில் ஜோதிகாவால் நடிக்க முடியாமல் போய்விட்டது.
Listen News!