• Sep 21 2024

இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் கடாவர்- நடிப்பில் அசத்திய அமலாபால்-ட்ரெயரிலேயே மிரட்டியுள்ளாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

மைனா திரைப்படத்தின் மூலம் முக்கிய நடிகையாக அறியப்பட்டவர் தான் அமலாபால். இதனைத் தொடர்ந்த பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் இயக்குநர் ஏ. எல் விஜய்யை திருமணம் செய்தமையாலும் இருவருக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினைகளாலும் சில காலம் நடிப்பதைத் தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார்.இதனால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.அத்தோடு அமலா பால் புரொடக்ஷன்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தின் முதல் படமாக 'கடாவர்' படத்தை தயாரித்து அதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனூப் எஸ் பணிக்கர் இயக்கியுள்ள இப்படத்தில் அதுல்யா ரவி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை மோகன்லால் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். டாக்டர் ரத்னா தங்கவேலு என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் சர்ஜண்டாக வரும் அமலாபால் ஒரு கொலை வழக்கை கையில் எடுக்கிறார்.

பின்பு அந்தக் கொலையாளியை எப்படி கண்டுபிடித்தார் என்பதை சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லிங்குடன் சொல்லியிருப்பது போல் வெளியாகியுள்ளது இந்த ட்ரைலர். இப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement