• Sep 21 2024

கதிர் -முல்லை வீட்டிற்கு சீக்கிரமா வாங்க- பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலால் ஆதங்கம் தெரிவித்து வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி தொடர்களில் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்ந்து பல திருப்பங்களுடன் தினந்தோறும் சிறப்பான எபிசோட்களை இந்தத் தொடர் ரசிகர்களுக்கு தந்து வருகிறது. இதனால் டி ஆர் பியிலும் முதலிடத்தை பிடித்துள்ளது.

அண்ணன் -தம்பிகள் பாசம், அவர்களை திருமணம் செய்த பெண்களின் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளிட்டவற்றை காட்சிப் படுத்தி வருகிறது இந்தத் தொடர். என்னதான் தனிக்குடித்தனங்கள் தற்காலங்களில் பெருகியிருந்தாலும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையைத்தான் அனைவரும் விரும்புகிறார்கள் என்பதற்கு இந்தத் தொடர் மிகச்சிறந்த உதாரணம் எனலாம்.

மேலும் இந்த தொடரின் திடீர் திருப்பமாக கதிர் வீட்டை விட்டு சென்று விடுகின்றார். இதனால் மூர்த்திக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.கதிர் மற்றும் முல்லையை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர தனம் மேற்கொண்ட முயற்சிகளும் வீணாகியுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரின் அடுத்தக்கட்டம் குறித்தும், தொடரில் ரசிகர்களை கவர்ந்த கதாபாத்திரங்கள் குறித்தும் விஜய் டிவி தற்போது பப்ளிக்கிடம் கருத்துக் கேட்டுள்ளது. அவர்களில் அதிகமானவர்கள் கதிர் -முல்லையையே கைக்காட்டியுள்ளனர். மேலும் இந்தத் தொடரில் அவர்கள் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் மூர்த்தி வந்துக் கூப்பிட்டால் கதிர் கண்டிப்பாக வீட்டிற்கு வந்து விடுவார் என்றும் கூறியுள்ளனர். மேலும் அனைவரும் ஒருசேர கதிர் -முல்லை வீட்டிற்கு சீக்கிரமா வாங்க என்றும் கூறியுள்ளனர். ஏராளமானவர்கள் இந்தத் விஷயத்தை மிகவும் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் இந்தத் தொடருக்கு ரசிகர்களின் ஆதரவு எவ்வளவு தூரம் உள்ளது என்பது தெரியவருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement