தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் அஜித் விஜய் சூர்யா, தனுஷ், கார்த்தி என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடிகை காஜல் அகர்வாலுக்கு எந்த ஒரு சினிமா பிரபலமும் இல்லாமல் திருமணம் நடந்தது.
மேலும் அந்த நேரத்தில் கொரோனா தாக்கம் இருந்தது, உறவினர்கள் மட்டும் சூழ அவரது திருமணம் கௌதம் என்பவருடன் நடந்து முடிந்தது.
திருமணம் முடிந்த பின்னர் காஜல் அகர்வால் தெலுங்கில் ஆச்சாரியா என்ற படத்தில் நடித்து முடித்தார். பின் கமல்ஹாசனடன் ஒப்பந்தம் ஆன இந்தியன் 2 படத்திலும் நடித்து முடிப்பார் என்று பார்த்தால் படமே பிரச்சனையில் சிக்கி இருக்கிறது.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக கடந்த மாதம் அதாவது ஏப்ரல் 19ம் தேதி நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளனர்.
குழந்தை பிறந்த பின்னர் சில புகைப்படங்கள் வெளியானது, அன்னையர் தினம் அன்றும் காஜல் தனது மகனுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்தார்.
எனினும் தற்போது காஜல் தனது கணவர் மற்றும் மகன் இருவரையும் ஒரு புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.செம கியூட்டான அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
பிறசெய்திகள்:
- அரபிக்குத்து பாடலை முறியடித்த, கமல் ஹாசனின் பத்தல பத்தல பாடல்- இத்தனை மில்லியன் பார்வையாளர்களா?
- வித்தியாசமான மாடர்ன் உடையில் மாளவிகா மோகனன் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்
- ‘நான் முதலில் விக்ரம் படத்தில் இல்லை’- நடிகர் விஜய் சேதுபதி கூறிய சுவாரஸியமான தகவல்
- டான் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூல் தெரியுமா..? வெளியானது முழு விபரம்
- “எந்த விசயம் ரசிகர்களுக்கு தெரியக்கூடாது என்று நினைத்தேனோஅது தெரிந்து விட்டது…” ; லோகேஷ் கனகராஜ்
- நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள “O2” திரைப்படத்தின் டீசர் ரிலீஸ்- எப்படி இருக்கு என்று பாருங்க
- விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படம்… எப்போது ரிலீஸ் தெரியுமா..?
Listen News!