• Nov 19 2024

நெய்லுக்கு ஒரு ஃபிரண்ட் கிடைச்சாச்சு - அட்லி பிரியா தம்பதியினருக்கு வாழ்த்துத் தெரிவித்த காஜல் அகர்வால்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் அட்லி.இவர் இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து தெறி மெர்சல் பிகில் போன்ற படங்களை இயக்கியிருக்கின்றார்.இவர் தற்பொழுது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகின்றார்.

இயக்கம் மட்டுமல்லாமல் தனது மனைவி பிரியா அட்லியுடன் இணைந்து 'A for Apple Productions' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி  தயாரிப்பாளராகவும் அட்லி வலம் வருகிறார்.இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்றன.


இயக்குநர் அட்லி, தனது  மனைவி நடிகை பிரியாவை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி திருமணம் செய்தார். தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது.இருவரும் பெற்றோர்கள் ஆக போகிறார்கள் என்ற செய்தியை அதிகாரப்பூர்வமாக பிரத்யேக ஃபோட்டோ ஷூட் நடத்தி சில நாட்களுக்கு முன் அறிவித்தனர்.

அட்லி & பிரியா தம்பதியருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியா அட்லி பிரத்யேக வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளார்.அந்த பதிவில், "மிகப்பெரிய வாழ்த்துகள்.. தாய், தந்தை, சந்தோஷம் நிறைந்த குழந்தைக்கும் அன்பு நிறைந்த வாழ்த்துகள். உங்கள் மூவரையும் விரைவில் சந்திக்க ஆவலோடு உள்ளேன். நெய்ல் அவனுடைய நண்பனை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்". நடிகை காஜல் அகர்வால் தனது என கமென்ட்டில் பதிவிட்டுள்ளார்



Advertisement

Advertisement