நடிகை காஜல் அகர்வால் குழந்தை பெற்ற பின்னரும் சமூக வலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வருவதோடு தற்போது மீண்டும் பழைய லுக்கிற்கு மாறி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமான நடிகையாக வலம் வருபவர் தான் காஜல் அகர்வால்.இவருக்க படவாய்ப்புக்கள் குவிந்து கொண்டிருக்கும் போதே தனது காதலன் கௌதம் கிச்சிலுவைத் திருமணம் முடித்தார்.
தற்பொழுது இவருக்கு அண்மையில் ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு நீல் என்று பெயர் வைத்துள்ளனர். குழந்தை நீலை பெற்றெடுத்த பின்னர், சற்று உடல் எடை கூடி காணப்பட்ட காஜல் அகர்வால், உடல் எடையை குறைப்பதற்காக மருத்துவர்களின் அறிவுரை படி, டயட் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
அந்த வகையில் தற்போது மளமளவென உடல் எடையை குறைத்து செம்ம பிட்டாக மாறியுள்ள காஜல் அகர்வால் வானவில் போன்ற வண்ண வண்ண நிறத்தில் உடை அணிந்து சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருவதையும் காணலாம்.
Listen News!