• Sep 20 2024

வில்லியாக களமிறங்கும் காஜல் அகர்வால்! அப்போ படம் செம மாஸ் தான்!

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த வருடம்  காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் இவர் படங்களில் நடித்து வருகிறார்.


அந்தவகையில் இந்தியன் 2, பகவந் கேசரி சத்யபாமா என தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த படங்களை தவிர்த்து தற்போது வில்லியாக புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ள படத்தில் தான் காஜல் அகர்வால் வில்லியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.


ஏற்கனவே ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த மகதீரா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த காஜல் தற்போது அதே ராஜமௌலி இயக்கத்தில் வில்லியாக நடிக்கவுள்ளார். இது குறித்த உத்தியோக பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவர இருக்கின்றது

Advertisement

Advertisement