• Sep 20 2024

கணவரை முத்தமிட்ட படியே பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய காஜல் அகர்வால்- கியூட்டான பஃமிலி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் காஜல் அகர்வால். இதனைத் தொடர்ந்து தமிழில் பழனி என்னும் படத்தின் மூலம் நாயகியானார். தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு மகதீரா திரைப்படமே இவரது கெரியரில் திருப்புமுனையாக அமைந்தது.

இந்தப் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார்.இதனால் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் மாறி மாறி நடித்து வந்தார்.இதனை அடுத்து பிரபல தொழிலதிபரான கௌதம் கிச்சிலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


இருக்கு ஒரு ஆண் குழந்தையும் அண்மையில் பிறந்தது. சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது குழந்தையுடன் அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்பொழுது தனது கணவரை முத்தமிட்ட படியே பிறந்தநாள் வாழ்த்துக் கூறி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement