• Nov 14 2024

சினிமாவை விட்டு விலகும் காஜல் அகர்வால்...? திடீர் முடிவிற்கு காரணம் இதுதானா..? கவலையில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் காஜல் அகர்வால். இவர் 2020 ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால், கடந்த 2021-ஆம் ஆண்டு கர்ப்பமானதால் சில காலம் நடிப்பிலிருந்து விலகி இருந்தார்.


பின்னர் கடந்தாண்டு இவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு நீல் எனப் பெயரிட்டு இருந்தனர். குழந்தை பிறந்ததை அடுத்து உடல் எடையை வெகுவாகக் குறைப்பதற்காக கடும் உடன்பயிற்சியில் ஈடுபட்டு வந்த காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பிலும் மும்முரமாக கலந்து வருகின்றார்.இதனைத் தொடர்ந்து தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக பகவந்த் கேசரி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.


இந்நிலையில் இந்த இரு படங்களிலும் நடித்து முடித்த கையோடு காஜல் அகர்வால் சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது அவர் மீண்டும் கர்ப்பமாக இருப்பதால் இந்தத் திடீர் முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.


இருப்பினும் இது ஒரு வதந்தி எனக் கூறி டோலிவுட் வட்டாரத்தினர் மறுத்துள்ளனர். அதாவது காஜல் சினிமாவிலிருந்து விலகுவது அவரின் மகனை கவனித்துக்கொள்வதற்காக தான் என கூறி வருகின்றனர். உண்மை நிலவரம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எது எவ்வாறாயினும் காஜல் அகர்வால் சினிமாவில் இருந்து விலகுகிறார் என்ற தகவல் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement