தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால்.கடந்த 2008 -ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான பழனி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு நடிகரான ராம்சரணுடன் இணைந்து மகதீரா என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் இவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்று கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தமிழில் விஜய் விஷால் தனுஷ் ஜெயம் ரவி சூர்யா கார்த்தி என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கிலும் மகேஷ்பாபு ராம்சரண் நானி எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.
இந்த நிலையில் இவர் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கௌதம் கிச்சிலு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது ஹனிமூன் புகைப்படங்களும், ரொமாண்டிக் புகைப்படங்களும் அவ்வப்போவது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தன.
காஜல் அகர்வால் கர்ப்பகால போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு நீல் என பெயர் வைத்திருந்தனர். ரசிகர்கள் பலரும் காஜல் அகர்வாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், காஜல் அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மகனுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.
பிற செய்திகள்
- மீண்டும் பாடலாசிரியராக அவதாரம் எடுக்கும் நம்ம சிவகார்த்திகேயன்- எந்த படத்திற்கு தெரியுமா..?
- “அது என் 18 வருஷ கனவு…” மனம் திறந்து பல விசயங்களை பேசிய நடிகர் ஜெய்..!
- ராதிகா வீட்டிற்கு சென்ற பாக்யாவிற்கு மயூ சொன்ன விசயம்– பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- “துரதிர்ஷ்டவசமாக எனக்கு ஏற்பட்டுள்ள நோய்”-பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட வேதிகா..!
- “நீயா நானா” கோபிநாத்தின் முழு சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா..? வெளியானது தகவல்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!