• Nov 17 2024

48 வயதிலும் நச்சுன்னு இருக்கும் கஜோல்... 2பிள்ளைகளுக்கு அம்மா போலவா இருக்காங்க... கொஞ்சம் கூட அவங்க இளமை குறையவே இல்லைங்க..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் பெண் நட்சத்திரமான கஜோல் சந்தேகத்திற்கு இடமின்றி பலராலும் மிகவும் விரும்பப்படும் ஒரு நடிகை ஆவார். இவர் தனது அற்புதமான நடிப்புத் திறன் மற்றும் இயற்கையான அழகு ஆகியவற்றால் பல வருடங்களாக ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து உள்ளார்.


இவ்வாறு பல ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகின்ற கஜோல் ஒரு இந்தி நடிகையாக இருந்தாலும் மற்ற மொழி ரசிகர்களையும் மிகவும் கவர்ந்து இழுத்திருக்கின்றார். 


பாலிவுட்டில் மட்டுமல்லாது இவர் தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்திருக்கின்றார். அதாவது 'மின்சாரக்கனவு' என்ற படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்து அசத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பின்னரே தனுஷ் நடித்த 'விஐபி 2' படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியினை அளித்திருந்தார்.


இன்றுவரை அதிகளவில் இந்தி படங்களில் நடித்து வரும் கஜோல் ஷாருக்கானின் “ஜீரோ” படத்திலும் கதாநாயகியாக நடித்து உள்ளார். 

நடிகை கஜோல் 1999-ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் அஜய் தேவை திருமணம் செய்து கொண்டு குடும்ப பந்தத்தில் இணைந்தார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது.

அந்தவகையில் 2003-ஆம் ஆண்டு இவருக்கு முதல் பெண் குழந்தை பிறந்து, அதன் பின்னர் 7 ஆண்டுகள் கழித்து 2010-ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தைக்கும் தாயானார் கஜோல்.


இவ்வாறாக 'மின்சார கனவு' மூலம் தமிழ் ரசிகர்களிடம் பரீட்சயமான நடிகை கஜோலிற்கு 48 வயது கடந்து விட்டது. இவரின் வயது 48 என்றாலும் 30 - 33 வயதுடைய பெண்ணை போலவே தோற்றமளிக்கிறார். இன்றும் இவரின் குறைபாடற்ற அழகின் பின்னணியில் உள்ள ரகசியத்தை அறிய பல ரசிகர்கள் விரும்புகிறார்கள்.


அந்தவகையில் இவர் சமீபத்திலும் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க வைத்திருக்கின்றார். அந்தப் புகைப்படங்களில் இவர் மஞ்சள் நிற புடைவை அணிந்து அச்சு அசலாக தேவதை போலவே காட்சி அளிக்கின்றார்.

Advertisement

Advertisement