• Nov 14 2024

காரைத் தொடர்ந்து கலாநிதி மாறன் கொடுத்த அடுத்த சர்ப்பிரைஸ் Gift.. குவியும் பாராட்டுக்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதல் முறையாக நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்த இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

மேலும் இவர்களுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, மிர்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.


பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படமானது வெளியான நாளிலிருந்து இன்றுவரை கிட்டத்தட்ட 600கோடியை கடந்து வசூலை வாரிக் குவித்த வண்ணம் தான் இருக்கின்றது. 


இந்நிலையில் இந்த சந்தோஷத்தைக் கொண்டாடும் விதமாக இப்படத்தினுடைய தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிகாந்துக்கு ரூ.1.24 கோடி மதிப்புள்ள BMW x7 ரக சொகுசு காரை அவருக்கு பரிசாக வழங்கி இருந்தார். அத்தோடு இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கும் விலையுயர்ந்த போர்ஷ் காரை பரிசாக வழங்கி இருந்தார்.


அதுமட்டுமல்லாது ஜெயிலர் படத்தில் பணியாற்றிய சுமார் 300 பேருக்கு பிரியாணி விருந்தும், தங்க நாணயமும் பரிசாக வழங்கி இருந்தார். இவ்வாறாக பரிசுகளை வாரி வழங்கி வரும் கலாநிதி மாறன் தற்போது மற்றுமோர் சர்ப்பிரைஸாக சன் குழுமத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் அனைவருக்கும் 25 கிராம் வெள்ளிக்காசை பரிசாக வழங்கி உள்ளார்.


மேலும் அந்த வெள்ளிக்காசின் ஒரு பக்கத்தில் சன் பிக்சர்ஸ் என்றும், மற்றொரு பக்கத்தி ஜெயிலர் தி ரெக்கார்ட் மேக்கர் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.  இதனைப் பார்த்த ரசிகர்கள் "இதற்கு ஒரு முடிவே இல்லையா" எனக்கேட்டு வருகின்றனர். அத்தோடு அவரின் இந்த செயலுக்குப் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement