40 வருடங்களுக்கு பின்னர் கமல்
மற்றும் ரஜினி
ஒரு
படத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாகவும் ஆனால்
இந்த
படத்தில் ரஜினி
நடிப்பதற்கு தனுஷால் ஒரு
சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு
திரைப்படமான ’இளையராஜா’ என்ற
படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த
படத்தில் இளையராஜா கேரக்டரில் தனுஷ்
நடிக்க
இருக்கிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த
நிலையில் இந்த
படத்தில் கமல்ஹாசன் திரைக்கதை எழுதுவதாக சமீபத்தில் அவர்
அறிவித்தார் என்பதும் இதன்
காரணமாக இந்த
படத்தில் அவர்
இணைந்துள்ளது உறுதி
செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ரஜினிகாந்த் இந்த
படத்தில் நடிக்க
இருப்பதாகவும் அவர்
அவரது
கேரக்டரிலேயே சிறப்பு தோற்றத்தில் நடிக்க
இருப்பதாகவும் கூறப்படுகிறது
இன்னும் ரஜினிகாந்த் இடம்
இது
குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றாலும் ரஜினிகாந்த், ஏஆர்
ரகுமான், கங்கை
அமரன்
உள்ளிட்டவர்களை இந்த
படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடிக்க
வைக்க
முயற்சிகள் நடந்து
கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இசைஞானி இளையராஜாவின் நெருங்கிய நண்பர்களின் ஒருவர்
ரஜினிகாந்த் என்பதால் அவர்
இந்த
படத்தில் நடிக்க
ஒப்புக்கொள்வார் என்றும் ஆனால்
அதே
நேரத்தில் தனுஷ்
இந்த
படத்தை
நாயகனாக நடித்து வருவதால் தனுஷ்
உடன்
இணைந்து நடிப்பதற்கு ரஜினிகாந்த் ஒப்புக்கொள்வாரா என்ற
சந்தேகமும் இருப்பதாக கூறப்படுகிறது.
தனுஷ்
தனது
மகளை
பிரிந்துவிட்டதால் அவர்
மீது
கடும்
அதிருப்தியில் இருப்பதாகவும் இதன்
காரணமாக இந்த
படத்தில் தனுஷ்
உடன்
ரஜினி
இணைந்து நடிப்பாரா என்ற
கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால்
இசைஞானி இளையராஜா ரஜினியின் நெருங்கிய நண்பர்
என்பதால் அவருக்காக இந்த
படத்தில் நடிக்க
அதிக
வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே
இந்த
படத்தில் நடிப்பது குறித்து ரஜினி
என்ன
முடிவெடுப்பார் என்பதை
பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்நிலையில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய
இருவரும் கடந்த
1981 ஆம்
ஆண்டு
வெளியான ’தில்லு
முல்லு’
என்ற
படத்தில் தான்
இணைந்து நடித்த
நிலையில், அதன்
பிறகு
1985 ஆம்
ஆண்டு
வெளியான ’கிராப்ட்ர்’ என்ற
ஹிந்தி
படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதன்
பிறகு
இருவரும் இணைந்து நடிக்காத நிலையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு
மீண்டும் ஒரே
படத்தில் இவர்கள் இருவரும் இணையும் வாய்ப்பு கிடைக்குமா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!