• Sep 20 2024

சூர்யாவை தம்பி சேர் என விழித்து மன்னிப்புக் கேட்ட கமல் -வைரலாகி வரும் முக்கிய பதிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகி நேற்றைய தினம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம். இந்தப் படத்திற்கு முன்னணி இசையமைப்பாளரான அனிரூத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். நேற்று இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் இப்படம் குறித்தும் தன்னுடைய கதாப்பாத்திரம் குறித்தும் சூர்யா டுவிட் செய்திருந்தார். அதில் அன்புள்ள கமல்ஹாசன் அண்ணன், விக்ரம் படத்தில் உங்களுடன் நடித்ததன் மூலம் என் கனவு நிறைவேறியுள்ளது. இதை உருவாக்கி கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு நன்றி” என பதிவிட்டிருந்தார்.

அந்த வகையில் தற்பொழுது இவரின் பதிவுக்கு நடிகர் கமல்ஹாசனும் பதில் டுவிட் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது “இது உங்களுக்குத் தெரியும் நீண்ட காலமாக இருந்தது. அன்பே, உங்களிடம் ஏற்கனவே இருந்தது. இப்போது அந்த மக்கள்தொகையை அதிகரிக்கவும். உங்களுக்கு ஆல் தி வெரி பெஸ்ட் என் தம்பி , மன்னிக்கவும் தம்பி சார்” என்றும் குறிப்பிட்டதைக் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement