• Nov 17 2024

புகாரை அடுக்கிய தனாவிடம் கிடுக்குப்படி கேள்வி கேட்ட கமல் -கடைசியில் நடந்த ருவிஸ்ட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. மேலும் இதன் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பு நிறைந்து சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் இதனை ஆவலுடன் பார்த்து வருகின்றார்கள் என்று தான் கூறவேண்டும்.

இவ்வாறுஇருக்கையில் வார இறுதியில் தோன்றியிருந்த கமல்ஹாசன், வழக்குகளை போட்டியாளர்கள் எதிர்கொண்ட விதம் குறித்து நிறைய கருத்துக்களையும் முன் வைத்திருந்தார். அவர் குறிப்பிட்ட விஷயங்கள், பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

இதற்கு மத்தியில், சமையல் அணியில் தொடர்ந்து ஒரே போட்டியாளர்கள் தான் இடம்பெற்று வருகின்றனர் என்ற தனலட்சுமியின் குற்றச்சாட்டை குறித்து கமல் கேள்வி எழுப்பி இருந்தார். தலைவர் தேர்வாவதற்கு முன்பாகவே குக்கிங் அணியில் இடம்பெறுவது யார் என்பது தீர்மானிக்கப்படுறது என தனலட்சுமி கூற, அப்போது மணிகண்டா, ஷிவின் உள்ளிட்ட போட்டியாளர்கள், அப்படி தலைவர் தேர்வாவதற்கு முன்பாகவே குக்கிங் அணியில் இடம்பெறுவது யார் என தீர்மானிக்கப்படவில்லை என்றும், அந்த அணியில் இடம்பெற கோரிக்கை மட்டுமே வைக்கப்படுகிறது என்றும் விளக்குகின்றனர்.

எனினும் இதற்கான தீர்வு தான் என்ன என கமல்ஹாசன் தனலட்சுமியிடம் கேட்க, "அனைத்து அணியில் இருந்து மாறி மாறி குக்கிங் அணிக்கும் வரவேண்டும்" என சொல்கிறார். இதன் பின்னர் பேசும் கமல்ஹாசன், கிச்சன் அணியில் இடம் பெறும் யாரும் ஜெயிலுக்கு போவதில்லை என தனலட்சுமியின் குற்றச்சாட்டை நினைவு கூற, இது பற்றி பேசும் தனலட்சுமி, "ஆமா சார் வர்றதே இல்ல. ஏன்னா அங்க கண்ணே போறதில்ல சார்" என்று கூறுகிறார்.

"அப்ப கிச்சன் டீம்ல போறதுல ஒரு Safety இருக்குன்னு நீங்க நினைக்கிறீங்க இல்லையா? என கமல்ஹாசன் கேட்டதும் விளக்கம் கொடுக்கும் மணிகண்டா, ஜெயிலில் இருப்பதை விட 3 வேளை சமைப்பது கஷ்டம் என கூற, "நான் கஷ்டம் குறித்து பேசவில்லை, சமவாய்ப்பை பற்றி பேசுகிறேன்" என்றும் கமல்ஹாசன் கூறுகிறார். இப்படி அடுத்தடுத்து சில போட்டியாளர்கள் சமையல் அணி குறித்த விளக்கம் கொடுத்து கொண்டே இருக்க, கடைசியில் தனலட்சுமியிடம் வரும் கமல், நீங்கள் எப்படி அணியை தேர்வு செய்வீர்கள் என்றும் கேட்கிறார்.

சமையல் தெரியாத நபர்கள் அந்த அணியில் இடம்பெற்றிருக்க வேண்டுமென்றும், அதிக ஆண்கள் அந்த அணியில் இருக்கும் போது தெரியாத விஷயத்தை மற்றவர்கள் தெளிவுபடுத்த ஒரு வாய்ப்பு உருவாகும் என்றும் விளக்கம் கொடுக்கிறார் தனலட்சுமி.

எனினும் இதனைத் தொடர்ந்து, "உங்களுடைய நோக்கம் வாய்ப்பா, இல்லை பழிவாங்கலா?" என கமல்ஹாசன் கேட்க அதற்கு தனலட்சுமி, அங்க வொர்க் பண்றவங்க இங்கையும் வொர்க் பண்ணனும்ன்னு தான் சார்" என கூறியதும், "நீங்கள் சம வாய்ப்பை தான் பேசுகிறீர்கள். என புரிந்து கொள்ள முடிகிறது. இருந்தாலும் எனக்கு சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்கிறேன்" என்றும் கமல் கடைசியில் கூறுகிறார்.

தன் உரிமைக்காக தானே குரல் கொடுத்த தனலட்சுமி என கடைசியில் அறிவிக்கும் கமல்ஹாசன், அவர் Save ஆனதாகவும் அறிவிக்கிறார்.

Advertisement

Advertisement