தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் நடிகர் கமல்ஹாசனை நடிப்பின் அரசன் என்றே அனைவரும் பார்க்கிறார்கள். அந்த அளவுக்கு நடிப்பின் மீதும் சினிமா மீதும் அளவுக்கு அதிகமான பற்று உள்ளவராக கமல் இருக்கிறார்.
சினிமாவில் வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து அனைவரையும் பிரமிப்பில் வியக்க வைப்பவர் கமல். தற்போது இந்தியன் படப்பிடிப்பில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் கமல். இந்த நிலையில் கமலை கடுப்பேற்றிய ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஏற்கனவே இயக்குநர் அட்லி மெர்சல் திரைப்படத்தை கமலிடம் சொல்ல அதைக் கேட்டு விட்டு கமல் அபூர்வ சகோதரர்கள் பட போஸ்டருடன் அட்லியை வரவேற்ற நிகழ்வு ஏற்கனவே இணையத்தில் வைரல் ஆனது.
ஏனெனில் மெர்சல் திரைப்பட கதை அபூர்வ சகோதரர்கள் கதையைப் போன்று இருந்ததனால் அதை சொல்லாத விதமாக சொல்லி அட்லியை கமல் மூக்கொடைத்தார். அதே போல் தான் சமீபத்திலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது ஏற்கனவே விஜய் ஆண்டனி நடித்து இன்னும் வெளிவராமல் இருக்கும் படம் அக்னி சிறகுகள். இந்தப் படத்தை கமல் சமீபத்தில் பார்த்து மிகவும் கடுப்பில் இருந்தாராம்.
மேலும் இந்தப் படத்தில் கமலின் இளைய மகளான அக்ஷரா நடித்திருக்கிறார். இந்தப் படத்தைப் பார்த்து கமல் கடுப்படைய காரணம் அவர் நடித்த மூன்றாம் பிறை படத்தை போன்று விஜய் ஆண்டனியின் படமும் இருந்தது என்பதுதான். அதனால் கமல் அக்னிச் சிறகுகள் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை கொஞ்சம் மாற்றி அமைக்கும்படி சொல்லி இருக்கிறாராம்.
Listen News!