தமிழ் சினிமாவில் மாஸ் இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாகன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தில் விஜய்சேதுபதி மற்றும் பதக் பாசில் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த ஜுன் மாதம் 3ம் திகதி வெளியாகிய இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இப்படத்திற்காக பிரபலங்கள் பலரும் படக்குழுவினரைப் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் கமல்ஹாசன் நேற்று லோகேஷ் கனகராஜுக்கு ஒரு சொகுசு காரை பரிசளித்தார். அதே போல 13 துணை இயக்குநர்களுக்கு பைக்கை பரிசாக அளித்தார்.
இந்நிலையில் இன்று நடிகர் சூர்யாவை சந்தித்து அவருக்கு விலையுயர்ந்த ரோலக்ஸ் வாட்ச்சை பரிசாக கொடுத்து இருக்கிறார். அந்த வாட்சின் மதிப்பு கிட்டத்தட்ட 28 லட்சத்தை விட அதிகம் என கூறப்படுகிறது. சூர்யா விக்ரம் படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே நடித்ததற்காக சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- முகமது நபி குறித்து அவதூறாக பேசியவருக்கு ஆதரவு தெரிவித்த நடிகை கங்கனா ரனாவத்
- மக்களின் மனம் கவர்ந்த பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பிக்கலாமா?- தொகுப்பாளர் இவர்தானாம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!