• Nov 10 2024

ரஜினி சேர் மாதிரி இல்லை கமல் சேர்- இந்தியன் படத்தின் மாஸ் சீன் பற்றி பேசிய ஷங்கர்- வைரல் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த 'விக்ரம்' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் ஃபார்முக்கு வந்துள்ளார். அரசியல் வேலைகள் ஒருபுறம் பரபரப்பாக சென்றுகொண்டிருந்தாலும், மற்றொரு புறம் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க திட்டமிட்டு வருகிறார்.

 அந்த வகையில்  தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பில் படு பிசியாக நடித்து வருகிறார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வந்த சூப்பர் ஹிட் படமான 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகி வருவதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. 


லைகா புரொடக்‌ஷன்ஸ்-ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின்-சுபாஸ்கரன் தயாரிக்கும் இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார். குறிப்பாக இப்படத்தில் 70 வயது பாட்டியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.


இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாகம் குறித்து இயக்குநர ஷங்கர் பிரபல சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது இந்தியன் படத்தில் ஒரு சீன் இருக்கும் அதில் தலை முடியை கையால் சரி செய்து துண்டை போட வேண்டும். அது கண்டிப்பாக ரஜினி சேர் செய்யிறமாதிரி தான் இருக்கப் போகுதோ தெரில என்று பயந்து பயந்து தான் கமல் சேர் கிட்டை சொன்னேன். நான் சொல்லும் போது சேர் அதை செய்தாரு ஆனால். அது ரொம்ப வித்தியாசமான சீனாத் தான் வந்திச்சு பார்க்கவே சூப்பரா இருந்திச்சு என்றும் ஷங்கர் கூறியுள்ளார்.



Advertisement

Advertisement