இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். ஜுன் 3ம் திகதி வெளியாகவுள்ள இப்படத்திற்காக கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.
இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் ஹெஸ்ட் ரோலில் சூர்யாவும் நடித்திருக்கின்றார். அத்தோடு இப்படத்தில் சூர்யாவும் இணைந்ததாக லோகேஷ் அறிவித்திருந்த நிலையில் அவரின் வெறித்தனமான லுக் போஸ்ட்டரையும் வெளியிட்டு இருந்தனர்.
இந்நிலையில் நேற்று இப்படத்தின் ப்ரோமோஷன் ஹைதராபாத்தில் நடைபெற்றது, அதில் கமலுடன் லோகேஷ், அனிரூத் கலந்து கொண்டிருந்தனர். அப்போது பேசிய அனிரூத் "விக்ரம் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலான திரைப்படம், இன்று அப்படத்தின் இறுதி பணியை முடித்திருக்கிறோம்.
நான் பொதுவாக எமோஷனல் நபர் கிடையாது. ஆனால் விக்ரம் மற்றும் அப்படத்தில் பணியாற்றியதை நான் மிஸ் செய்ய போகிறேன். இன்று நாங்கள் படத்தை பார்க்கும் போது நான் லோகேஷிடம் சென்று கண்கலங்கிவிட்டேன். படத்தில் கமல் சாரின் நடிப்பு பிரமிக்க வைத்துவிட்டது. விக்ரம் படத்தில் பணியாற்றியது ரொம்பவும் பெருமையாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- பாரதி கண்ணம்மா சீரியலில் என்ரி கொடுத்த சபரி-அட இவர் தான் வெண்பாவுக்கு ஜோடியா?
- ‘இது வழக்கமான கதை தானே வேற கதை கொண்டு வாருங்கள்’- லோகேஷின் திரைப்படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்
- கே.கே எனும் மாயக்குரலோனின் மறைவு இசை உலகத்தில் ஒரு பேரிழப்பு- தி லெஜெண்ட் திரைப்பட இயக்குநர் தெரிவிப்பு
- வருங்கால மனைவியின் பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாடிய நவீன்-குவியும் வாழ்த்துக்கள்
- உலகம் முழுவதும் டான் திரைப்படம் செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?-செம குஷியில் படக்குழு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!