• Sep 20 2024

அமெரிக்கா செல்லும் கமல்…அடடே ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்பிரைஷ்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ள படமும் மல்டி ஸ்டார் படம், இது தேவர்மகன் 2 ஆக இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் இந்த படம் பற்றி எந்த தகவலும் இதுவைர வெளியாகவில்லை.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் துவங்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடுவதற்காக சென்னையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு நடைபெற்றிருந்தது. அதில கலந்து கொண்ட கமல், உதயவிநிதியின் அடுத்த படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தான் தயாரிக்க போவதாக குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் கமல் அடுத்து எந்த படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்களிடம் அதிகம் உள்ளது. இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக கமல், விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.வேறு எதற்காகவும் இல்லை. நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் இந்தியன் 2 படத்திற்கு தயாராவதற்கு தான் என கூறப்படுகிறது.

டைரக்டர் ஷங்கர் இயக்கி வந்த இந்தியன் 2 படத்திற்காக டாப் மேக்அப் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்காக தான் கமல் அமெரிக்கா செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியன் 2 ல் வயதான கெட்அப் சரியாக பொருந்த வேண்டும் என்பதற்காக தான் கமல் ஹாலிவுட்டின் டாப் மேக்அப் கலைஞர்களை சந்திக்க போவதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே கமலின் மேக்அப் சரியாக அமையவில்லை என்று தான் இந்தியன் 2 படம் தாமதமானது. எனினும் அதற்கு பிறகு விபத்து, கொரோனா, லாக்டவுன், வழக்கு என அடுத்தடுத்த காரணங்களால் இந்தியன் 2 படம் தொடர்ந்து தாமதமானது.மேலும் இந்த முறையும் அது போல் தவறு நடக்காமல் இருக்கத்தான் கமல் இப்போதே இந்தியன் 2 படத்திற்காக தயாராக சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் கமல் 3 வாரங்கள் தங்க போவதாகவும், அதற்கு பிறகு இந்தியா திரும்பும் கமல் செப்டம்பர் மாதத்தில் செப்டம்பர் மாதத்தில் இந்தியன் 2 ஷுட்டிங்கை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் இந்தியன் 2 படத்தை முடித்த பின்னர் தான் கமல், மகேஷ் நாராயணன் படத்திற்கு தயாராவார் என சொல்லப்படுகிறது.

இந்தியன் 2 படத்தில் துவங்கப்பட்ட போது இதில் காஜல் அகர்வால், விவேக், நெடுமுடி வேணு ஆகியோர் கமிட்டாகி இருந்தனர். ஆனால் தற்போது குழந்தை பிறந்துள்ளதால் காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்திலிருந்து விலகி உள்ளார். இதே போல் விவேக், நெடுமுடி வேணு இருவரும் உயிரிழந்து விட்டனர்.

இதனால் அவர்களள் நடித்த கேரக்டர்களில் யார் நடிக்க போகிறார்கள் என்பது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அனிருத் இசையைமக்கும் இந்தியன் 2 படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் பிரியா பவானிசங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement