• Sep 20 2024

கோவை வந்தடைந்த கமல்ஹாசனுக்கு... விமான நிலையத்தில் கொடுக்கப்பட்ட உற்சாக வரவேற்பு...!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் என்பதைத் தாண்டி கமல்ஹாசன் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், நடன இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவராக விளங்குகின்றார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனை அடுத்து தற்பொழுது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது. இவ்வாறாக சினிமாவில் கலக்கி வந்தாலும் நடிகர் கமல்ஹாசன் அரசியலிலும் கால் பதித்து அங்கும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார். 


அந்தவகையில் 2018ல் அவர் புதிதாக அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கி அடுத்த அடுத்த தேர்தலுக்கும் தயாராகி வருகின்றார். அதாவது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் இன்று கோவை மாவட்டத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோவை மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இதனையடுத்து கமல்ஹாசனை வரவேற்கும் விதமாக கோவை தெற்கு வார்டு மக்கள் நீதி மய்யம் சார்பில் ரயில் நிலையம், டவுன்ஹால் பகுதியில் "யார் எதிர்த்தாலும்! எந்த மலை தடுத்தாலும்! இமய மலையாய் உம்மை தூக்கி பிடிக்கும் கோவை மக்களின் குரலாக 2024 நாடாளுமன்றத்தில் கர்ஜிக்க போகும்... நம்மவரே! வருக வருக..!" என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள்  ஒட்டப்பட்டு இருந்தன.


இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த கமல்ஹாசனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement