முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் என்றால் அது கலவையான விமர்சனத்தை பெற்றாலும் அதற்கான வரவேற்பு அதிகமாக இருக்கும் காரணம் அவர்களுடைய ரசிகர்கள் கூட்டமே படத்தை வெற்றியடையச் செய்கின்றனர்.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் 230 கோடிகளை தாண்டி வசூல் வேட்டையாடி உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளியான படங்களில் வசூலில் முதலிடத்தில் மாஸ்டர் படம் தான் உள்ளது.
தற்போது வரை மாஸ்டர் படத்தின் வசூலை எந்த படமும் முறியடிக்கவில்லை.இந்நிலையில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.பான் இந்திய படமாக வெளியான இப்படம் அணைத்து தரப்பு மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
முதல் நாள் சாதனை படைத்த கமல் ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் படம் மாஸ்டர் படத்தின் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரண்டுமே ஒரே இயக்குநரின் படம் என்றதால் இவ்வாறு வசூல் சாதனை செய்வதால் லோகேஷின் மார்க்கெட் தற்போது தமிழ் சினிமாவில் பல மடங்கு உயர்ந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!