• Sep 21 2024

இந்தியன் 2 படத்திற்கு தனது கெட்டப்பை மாற்றி கமல்ஹாசன்-வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியன் 2 படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் புது கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் பிளாக் பஸ்டர் வெற்றிக்குப் பின்னர், உலக நாயகன் கமல்ஹாசன் தனது அடுத்த படமான இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

ஷங்கர் இயக்கும், இதில் ரகுல் ப்ரீத் சிங் , பிரியா பவானி சங்கர் , சமுத்திரக்கனி , பாபி சிம்ஹா ,குரு சோமசுந்தரம் , டெல்லி கணேஷ் , ஜெயபிரகாஷ் , வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் லீட்ரோலில் நடித்து வருகின்றனர்.

1996ம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றது. லஞ்சம் வாங்கும் ஊழல் பெருச்சாளிகளுக்கு கொலை மிரட்டல் விடும் சுதந்திரப் போராட்ட வீரரின் கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.மேலும்  முதல் பாகத்தின் மகத்தான் வெற்றியைத் தொடர்ந்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் 2019ம் ஆண்டு படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது.



விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் 2020ம் ஆண்டு கிரேன் சரிந்து விழந்து விபத்தால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும் அதையடுத்து கொரோனா தொற்று ஊரடங்கு, தயாரிப்பு நிறுவனத்துடன் பிரச்சனை என பல ஆண்டுகள் இந்தியன்2 ஷூட்டிங் நடத்த முடியாமல் போனது. எனினும் இதையடுத்து, ரெட் ஜெயண்ட் உதவியோடு அனைத்து பிரச்சனைகளும் சரிசெய்யப்பட்டு படப்பிடிப்பு ஆரம்பமாகியது.

அத்தோடு  இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பாரிஸ் கார்னரிலுள்ள எழிலகம் கட்டிடத்தில் சமீபத்தில் ஆரம்பமாகியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. எனினும் தற்போது இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகியுள்ளது. இந்தியன் 2 படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் முறுக்கு மீசையுடன் புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படம்  இணையத்தில் வெளியாக உள்ளது. கமலின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை  டிரெண்டாக்கி வருகின்றனர்.




இயக்குநர் சங்கர் ராம்சரனின் 15வது படத்தில் பிசியாக இருப்பதால், கமலஹாசனின் காட்சிகள் தவிர மற்ற காட்சிகளை இயக்க சங்கரின் உதவி இயக்குநர்களாக இருந்து தற்போது பிரபல இயக்குநர்களாக மாறியுள்ள வசந்த பாலன், அறிவழகன், சிம்பு தேவன் ஆகியோரை சங்கர் களம் இறக்கி உள்ளதாக கூறப்படுகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். விக்ரம் படத்திற்கும் அனிருத் தான் இசையத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement