68வது தேசிய விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளன. மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த விருதுகளில் 10 விருதுகளை இந்த ஆண்டு தமிழ்ப்படங்கள் தட்டித் தூக்கியுள்ளன. குறிப்பாக சூரரைப் போற்று திரைப்படம் 5 விருதுகளைப் பெற்றுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் அவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படம் தான் சூரரைப் போற்று.கேப்டன் கோபிநாத்தின் பயோ பிக்காக வெளியான இந்தப் படம் சிறப்பான திரைக்கதையுடன், சூர்யாவின் நடிப்பும் சேர்ந்து மிளிர்ந்தது.
ஓடிடியில் வெளியான போதிலும், இந்தப் படம் மிகுந்த வரவேற்பை பெற்றது.கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையின் ஒரு பகுதியை மட்டுமே கதைக்கருவாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது.இதையடுத்து படக்குழுவினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கமல்ஹாசனும் தனது வாழ்த்துக்களை டுவிட்டர் பக்கத்தில் ஒட்டு மொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை தமிழ் திரையுலகம் திரும்பிப் பார்க்க செய்துள்ளதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை குவித்துள்ளதை அவர் தனியாக குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். இது பெருமையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தவிர சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா படங்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். விருதாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- உங்கள் சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு கொடுத்து விட்டாலே நிம்மதி வந்து விடும்- ரஜினியை வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்
- முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்ற நடிகர் சூர்யா
- பிறந்தநாள் அன்று சூர்யா வெளியிட்ட அறிக்கை-என்ன கூறியுள்ளார் தெரியுமா..?
- சென்னை ஏர்போட்டில் அஜித்தின் நெகிழ்ச்சி செயல்- தீயாய் பரவும் வீடியோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!