• Nov 19 2024

பணி நீக்கம் செய்யப்பட்ட ஷர்மிகாவுக்கு புதிய கார் ஒன்றினை வழங்கிய கமல்ஹாசன்- குவியும் பாராட்டுக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளா இணையதளம் மூலம் கோவை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் மிகவும் பிரபலமானார். அவரை பாராட்டவும், ஊக்கமளிக்கவும் பிரபலங்கள் பலரும் அவ்வபோது ஷர்மிளா பணியாற்றும் பேருந்தில் பயணம் செய்து அவருக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்க பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் இவரது பேருந்தில் பயணம் மேற்கொண்டு பாராட்டு தெரிவித்தார்.

அப்போது, பணியில் இருந்த பயிற்சி பெண் நடத்துநருக்கும், ஷர்மிளாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பணியை இழந்த ஷர்மிளா இனி வரும் காலத்தில் கார் அல்லது ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்திக் கொள்வேன் என்று தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ஷர்மிளாவுக்கு கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி, முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தவர் ஷர்மிளா. பேருந்து ஓட்டுநராக வரவேண்டுமெனும் தன்னுடைய கனவிற்காக உழைத்து, சவாலான பணியை திறம்படச் செய்து வந்தார். அதற்காகப் பல்வேறு தரப்பின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார்.

தன் வயதையொத்த பெண்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்தைய விவாதம் என் கவனத்திற்கு வந்தது. மிகுந்த வேதனை அடைந்தேன். ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல. பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை.  


கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவிற்கு வழங்குகிறது. வாடகைக் கார் ஓட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார். ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தடைகளை உடைத்து தரணி ஆளவருகையில், ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மகள் ஷர்மிளாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



Advertisement

Advertisement