• Sep 21 2024

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு... இன்று மாலை ரசிகர்களுக்கு காத்திருக்கும் சப்ரைஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நாயகன் என்றால் அது நம்ம கமல் ஹாசன் தான். உச்ச நாயகனான இவர் உலகநாயகன் என ரசிகர்களால் சிறப்பாக அழைக்கப்படுகின்றார். இவருக்கு தமிழ் நாட்டில் மட்டுமன்றி உலகம் பூராகவும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 


இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான 'விக்ரம்' படமானது மாபெரும் வசூல் சாதனை செய்து வெற்றியை எட்டியிருந்தது. இந்நிலையில் விக்ரம் படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமல் யாருடைய இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் பலரின் மத்தியிலும் இருந்து வந்தது.

அந்தவகையில் ஒரு சில இயக்குநர்களின் பெயர்கள் கூறப்பட்டு வந்தாலும் அவை எதுவும் அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்படவில்லை. இந்நிலையில், கமல் ரசிகர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தற்போது ஒரு ஸ்பெஷல் செய்தி வெளியாகியுள்ளது.


அதாவது கமல் ஹாசன் தயாரித்து நடிக்கவிருக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.

மேலும் இப்படத்தை சென்சேஷ்னல் இயக்குநர் எச். வினோத் இயக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. கமல் ஹாசன் - எச். வினோத் கூட்டணியில் உருவாகும் இப்படம் கண்டிப்பாக மாபெரும் வெற்றியடையும் என இப்போதிருந்தே திரைவட்டாரத்தில் பேச்சுக்கள் கிளம்பத் தொடங்கி விட்டன.

Advertisement

Advertisement