• Sep 20 2024

ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சரைச் சந்தித்த கமல்ஹாசன்- அட இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக இருந்தாலும் தற்பொழுது தன் கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்திருக்கும் நடிகர் தான் கமல்ஹாசன். விக்ரம் பட வெற்றிக்குப் பிறகு இவருடைய மார்க்கெட்டானது பல மடங்கு உயர்ந்துள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.

இவர் நடிகராக மட்டுமல்லாது இயக்குநர், நடனக் கலைஞர், எழுத்தாளர் எனப் பல துறைகளில் பணியாற்றி வருகின்றார். மேலும் விக்ரம் படமானது இதுவரைக்கும் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.

கமல் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை 'விக்ரம்' படம் பெற்றுள்ளது. இதனை அடுத்து மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ளார். இந்நிலையில் கமல்ஹாசன், ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சரான ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யானை அவரது மாளிகையில் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் கமல்ஹாசன், சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட புதிய ஊடகங்கள் குறித்தும், அடுத்த தலைமுறை அதை எப்படி கையாள்வது என்பதைப் பற்றிய சில விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement