தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று உயர்ந்த அஸ்தத்தைப் பிடித்திருக்கும் நடிகர் தான் கமல்ஹாசன்.இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய விக்ரம் திரைப்படம் உலக அளவில் வெற்றி பெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்திருந்தது.
இதற்காக கமல்ஹாசன் விக்ரம் படத்தின் இயக்குநர் துணை நடிகர்கள் மற்றும் துணை இயக்நர்கள் என்போருக்கும் பல விதமான பரிசில்களை வழங்கியிருந்தார்.இப்படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசனுக்கு படவாய்ப்புக்களும் குவிய ஆரம்பித்து விட்டது எனலாம்.
இதனால் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பானது சில ஆண்டுகளுக்கு முதலே ஆரம்பித்தது. இருப்பினும் படப்பிடிப்பில் ஏற்பட்டு விபத்து காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் படப்பிடிப்பு நடந்து வருகின்றது.இந்நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுத்த ஒரு போட்டோவை கமல் வெளியிட்டு இருக்கிறார்.
25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச் சிலையின் கீழே இந்தியன்-2 படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள். pic.twitter.com/tLbjpw2MjE
நேதாஜியின் சிலை முன்பு இன்று இந்தியன் 2 ஷூட்டிங் நடைபெற்று இருக்கிறது. அந்த சிலையை இதே நாளில் 25 வருடங்கள் முன்பு கலைஞர் கருணாநிதி திறந்து வைத்திருக்கிறார்.
"25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச் சிலையின் கீழே இந்தியன்-2 படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்" என கமல் தன் போட்டோவை வெளியிட்டு பேசி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!