• Sep 20 2024

தீக்குச்சியை வைத்து மாஸ் காட்டும் கமல்ஹாசன்- பிக்பாஸ் சீசன் 7 இன் ப்ரோமோ ரெடி- எப்போது ரிலீஸ் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி மவுசு உண்டு.இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்துள்ள இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி உள்ளார். 

இதன் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகென் ராவ், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசனில் ராஜு, கடைசியாக நடந்து முடிந்த ஆறாவது சீசனில் அசீம் ஆகியோர் டைட்டில் வின்னர்களாகினர்.


கடைசியாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியும் ஜனவரி மாதத்தில் தான் முடிவடைந்தது. அந்நிகழ்ச்சி முடிந்து 4 மாதங்களே ஆகும் நிலையில், தற்போது அடுத்த சீசன் குறித்த வேறலெவல் அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் வருகிற ஜூலை மாதமே தொடங்கப்பட உள்ளதாகவும் அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 7 இன் முதல் ப்ரோமோ ரெடியாகி விட்டதாகவும் அது விரைவில் ரிலீஸாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement