• Sep 20 2024

who's the hero பாடலை கமல்ஹாசன் முன்னாடி பாடி அசத்திய தொகுப்பாளினி ப்ரியங்கா- வைரலாகி வரும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இதில் பல சீசன்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் சூப்பர் சிங்கர்.

இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது ஜுனியர்களுக்கான 8 வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இதனை மா. கா.பா வும் ப்ரியங்காவும் தொகுத்து வழங்கி வருகின்றனர். இதன் மூலம் இருவரும் ரசிகர்களைக் கவர்ந்த தொகுப்பாளராகவும் காணப்படுகின்றனர்.

இதில் ப்ரியங்கா ஸ்டார் மியூசிக் என்னும் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகின்றார். இது இவருக்கு மற்றொரு அடையாளத்தை தந்தது. மேலும், சமீபத்தில் நடந்து முடிந்து பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொண்ட ப்ரியங்கா, இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார்.

தொடர்ந்து தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் பிபி ஜோடிகள் என இரு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கமல் ஹாசன் தனது விக்ரம் படத்தின் ப்ரோஷனுக்காக வந்திருந்தார்.

அப்போது, கமல் ஹாசனின் whose the hero பாடலை அவரே முன்பே பாடி அசத்தியுள்ளார் தொகுப்பாளினி ப்ரியங்கா. அந்த வீடியோவும் வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement